Verse 1என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
Verse 2வானம் ப+மி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்
தேடி இரட்சிக்க பிதா என்னை அனுப்பினதால்
ஓடி வந்தேன் மானிடனாய்
Verse 3பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாவி உன்னை அழைக்கின்றேன் பார்
உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்
பாதம் தன்னில் இளைப்பாற வா
Verse 4பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் முடிவினைப் பார்
பரிகாசச் சின்னமாய் சிலுவையிலே
பலியானேன் பாவி உனக்காய்
Verse 5உம்மை நேசிக்கின்றேன் நான்
உம்மை நேசிக்கின்றேன் நான்
கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனோ?