Verse 1எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
Verse 2ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன்
உயிருள்ள நாள் வரையில்
எந்தன் நாவில் புதுப்பாட்டு
எந்தன் இயேசு தருகிறாh
Verse 3பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில்
தேவனவர் தீபமாய்
என்னைத் தேற்றினார்
Verse 4வாதை நோயும் வந்தபோது வேண்டல் கேட்டிட்டார்
பாதை காட்டித்துன்பமெல்லாம் நீக்கி மீட்டிட்டார்
Verse 5சேற்றில் வீழ்ந்த என்னையவர் தூக்கியெடுத்தார்
நாற்றமெல்லாம் ஜீவரத்தம் கொண்டு மாற்றினாh
Verse 6தந்தை தாயும் நண்பருற்றார் யாவுமாகினார்
நிந்தை தாங்கி எங்குமவர் மேன்மை சொல்லுவேன்