LyricFront

Immanuvele Vaarum Vaarum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இம்மானுவேலே வாரும் வாருமே மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே; மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
Verse 2
உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும் மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே இம்மானுவேலின் நாள் சமீபமே.
Verse 3
ஈசாயின் வேர்த் துளிரே வாருமே பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே; பாதாள ஆழம் நின்று ரட்சியும் வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.
Verse 4
அருணோதயமே ஆ வாருமே வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே; மந்தார ராவின் மேகம் நீக்கிடும் இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.
Verse 5
தாவீதின் திறவுகோலே வாருமே விண் வாசலைத் திறந்து தாருமே; ஒடுக்கமாம் நல் வழி காத்திடும் விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.
Verse 6
மா வல்ல ஆண்டவா வந்தருளும்; முற்காலம் சீனாய் மலைமீதிலும் எக்காளம் மின்னலோடு தேவரீர் பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?