LyricFront

Immattum Jeevan Thantha

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த பணிவோடுண்மையாக இஸ்தோத்திரிப்போமாக.
Verse 2
நாள் பேச்சைப்போல் கழியும் தண்ணீரைப்போல் வடியும் இதோ இந்நாள் வரைக்கும் இவ்வேழை மண் பிழைக்கும்.
Verse 3
அநேக விதமான இக்கட்டையும் உண்டான திகிலையும் கடந்தோம்; கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்.
Verse 4
அடியார் எச்சரிப்பும் விசாரிப்பும் விழிப்பும் தயாபரா நீர்தாமே காக்காவிட்டால் வீணாமே.
Verse 5
தினமும் நவமான அன்பாய் நீர் செய்ததான அநுக்ரகத்துக்காக துதி உண்டாவதாக.
Verse 6
துன்னாளில் நாங்கள் தாழ்ந்து நொந்தாலும் உம்மைச் சார்ந்து நிலைக்கிறதற்காக திடன் அளிப்பீராக.
Verse 7
மா ஜன சேதத்துக்கும் உண்டான போர்களுக்கும் ஓர் முடிவு வரட்டும் நொறுங்கினதைக் கட்டும்.
Verse 8
சபையை ஆதரித்து அன்பாய் ஆசீர்வதித்து எல்லாருக்கும் அன்றன்றும் அருள் உதிக்கப்பண்ணும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?