LyricFront

Indru Mudhal Nan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
Verse 2
பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
Verse 3
செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன் நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
Verse 4
பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
Verse 5
பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன் இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
Verse 6
எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன் பலுகி பெருகிடுங்கள் பு மியெல்லாம் நிரம்பிடுங்கள் உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்
Verse 7
வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய் கடற்கரை மணலை போல பெருகிடுவாய் எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
Verse 8
நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்
Verse 9
மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும் பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்
Verse 10
கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்து வந்தால் வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்
Verse 11
உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் மலடு இருப்பதில்லை யுடிழசவழைn ஆவதில்லை ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?