LyricFront

Itho Marathil Saaga

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இதோ மரத்தில் சாக உன் ஜீவன் உனக்காக பலியாம் லோகமே; வாதை அடி பொல்லாப்பை சகிக்கும் மா நாதனை கண்ணோக்குங்கள் மாந்தர்களே.
Verse 2
இதோ மா வேகத்தோடும் வடியும் ரத்தம் ஓடும் எல்லா இடத்திலும் நல் நெஞ்சிலே துடிப்பும் தவிப்பின்மேல் தவிப்பும் வியாகுலத்தால் பெருகும்;
Verse 3
ஆர் உம்மைப் பட்சமான கர்த்தா இத்தன்மையான வதைப்பாய் வாதித்தான்? நீர் பாவம் செய்திலரே பொல்லாப்பை அறயீரே; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?
Verse 4
ஆ! இதைச் செய்தேன் நானும் என் அக்கிரமங்கள் தானும் கடற்கரை மணல் அத்தன்மையாய்க் குவிந்த என் பாதகங்கள் இந்த வதைப்புக் காதி மூலங்கள்.
Verse 5
நானே கை கால் கட்டுண்டு பாதாளத்தில் தள்ளுண்டு கிடத்தல் நியாயமே நானே முடிவில்லாமல் சந்தோஷத்தைக் காணாமல் வதைக்கப்படல் நீதியே.
Verse 6
நீரோ என்மேல் உண்டான அழுத்தும் பாரமான சுமை சுமக்கிறீரே; ஆசீர்வதிக்க நீரே போய்ச் சாபமாகிறீரே; நான் தப்ப நீர் படுகிறீர்.
Verse 7
நீர் என் கடனைத் தீர்க்க பிணையாய் என்னை மீட்க மரத்தில் ஏறினீர்; ஆ சாந்தமான சிந்தை நீர் முள் முடியின் நிந்தை எத் தீங்கையும் பொறுக்கிறீர்.
Verse 8
நான் சாவின் வாய்க்குத் தப்ப நீரே அதை நிரப்ப அதில் விழுகிறீர்; நான் நீங்க நீர் முன்னிற்பீர் நான் வாழ நீர் மரிப்பீர் அவ்வாறு என்னை நேசித்தீர்.
Verse 9
கர்த்தாவே நீர் பகைக்கும் பொல்லாப்பை என்றென்றைக்கும் வெறுத்தரோசிப்பேன்; என் இச்சையை நாள்தோறும் ஆகாத சிந்தையோடும் நான் சிலுவையில் அறைவேன்.
Verse 10
ஆ உமது ஜெபமும் அவஸ்தையும் தவமும் கண்ணீருங் கிலேசமும் நான் செத்தால் பரலோக சந்தோஷத்துக்குப் போக வழித் துணைக்குதவவும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?