LyricFront

Iyare Neer Thangum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஐயரே நீர் தங்கும் என்னிடம் ஐயரே நீர் தங்கும் - இப்போது அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே ஐயா நீர் இரங்கும்
Verse 2
பகல்முழுதுங் காத்தீர் சென்ற பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம் பரமனே இந்த இரவிலும் வாரும் பாவியை நீர் காரும்
Verse 3
தங்கா தொரு பொருளும் என்னிடம் தங்கா தொரு பொருளும் -யேசு தற்பரனே நீர் ஒருவரேயென்னில் தங்கித் தயைபுரியும்
Verse 4
உயிரே துமையன்றிப் பாவிக் குயிரே துமையன்றி - என்றன் உடல் உயிர் உம்மால் உய்கிறதையா உத்தமனே தங்கும்
Verse 5
நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம் நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா நின்னை விடமாட்டேன்
Verse 6
என்பாவம் மனியும் இறையே என்பாவம் மனியும் - அப்போது எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில் எனக்கோர் திகிலேது?
Verse 7
எனக்கு நீர்காவல் என்றும் எனக்கு நீர்காவல் - என்றன் இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர் எல்லவர்க்குங் காவல்
Verse 8
உம்மோடே படுப்பேன் ஐயா உம்மோடே படுப்பேன் - இரவில் உம்மோடேயர்வேன் சேதமில்லாமல் உம்மோடெழுந்திருப்பேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?