LyricFront

Kalaiyum Maalaiyum Evelayum karthari

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என தூதர் பாடிடும் தொனி கேட்குதே
Verse 2
கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானவர் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றி திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன
Verse 3
ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை வாஞ்சித்து நாடிடுவேன
Verse 4
தீங்கு நாளில் தம் கூடார மறைவில் தேடிச் சேர்த்தென்னை மறைப்பார் உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து உயர்த்துவார் கன்மலைமேல
Verse 5
எந்தன் முகத்தை தேடுங்கள் என்று என் கர்த்தர் சொன்னதினாலே தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிட்டும் என் சத்தம் கேட்டு தயவாகப் பதிலளிப்பாh
Verse 6
தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என் கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார் எந்தன் உள்ளம் ஸ்திரமாக திடமாகக் கர்த்தருக்கே என்றென்றும் காத்திருக்கும்
Verse 7
எனக்காக யாவும் செய்து முடிப்பார் என் கர்த்தர் வாக்குமாறிடார் தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும் தவறாமல் நிறைவேற்றுவாh

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?