Verse 1கர்த்தனே எம் துணையானீர்
நித்தமும் எம் நிழலானீர்
கர்த்தனே எம் துணையானீர்
Verse 2எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் (2)
மனுமக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர்
Verse 3பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் (2)
ராஜா, உம் அன்பு எனைக்கண்டது
உம்மைப் போல ஐயா எங்கும் கண்டதில்லை
Verse 4சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் (2)
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உமைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
Verse 5ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
ராஜனே, உமைப்பாடக்கூடுமோ? (2)
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உமைப்போல ஐயா, எங்கும் கண்டதில்லை