கர்த்தரை நான் எக்காலமும்
ஸ்தோத்தரிப்பேனே
அவர் துதி எப்போதும் வாயிலிருக்கும்
ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
அனைவரும் அதைக்கேட்டு அக்களிப்பார்கள்
அவரை நோக்கிப் பார்த்திடுவோம்
ஒளிமாயமாவோம்
முகங்களெல்லாம் வெட்கப்பட்டு
போவதில்லையே
ஏழை கூப்பிட்டேன் பதில் கொடுத்தாரே
எல்லாவிதத் துயர் நீக்கி இரட்சித்தாரே