Verse 1கர்த்தர் உன் வீட்டை கட்டாராகில்
அதை கட்டும் உந்தன் பாடு விருதா
கர்த்தர் நகரத்தைக் காவல் செய்யாவிடில்
உன் கண் விழிப்பும் விருதா
Verse 2ஆதலால் என் உள்ளமே சதா அவர் சமூகம்
நிதம் நேசரையே துதித்திடட்டும்
கர்த்தருக்கு பயந்து அவர் வழி நடந்தால்
நீ பாக்கியம் கண்டடைவாய்
Verse 3உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாத படி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார்
Verse 4இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நீ பயப்படவே மாட்டாய்
Verse 5சிங்கத்தின் மேலும் நடந்து
வலு சர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார்
Verse 6ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர்
Verse 7கர்த்தருக்குப் பயப்பட்டவன்
இவ்வித ஆசீர்வாதமும் பெறுவான்
கர்த்தர் சீயோனில் இருந்து உன்னை
கடைசி மட்டும் ஆசீர்வதிப்பார்