LyricFront

Kartharaiye Thuthipen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தரையே துதிப்பேன் காலமெல்லாம் துதிப்பேன் வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் என்றே பாடுவேன் - நான்
Verse 2
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கதறி கூப்பிட்டேன் நெருங்கி வந்து குரலைக் கேட்டு விடுதலை கொடுத்தார்
Verse 3
எனக்குதவும் கர்த்தர் எனது நடுவில் இருக்கிறார் எதிரியான அலகையை நான் எதிர்த்து வென்றிடுவேன்
Verse 4
எனது பெலனும் எனது மீட்பும் கீதமுமானார் நம்பியிருக்கும் கேடயமும் கோட்டையுமானார்
Verse 5
கர்த்தர் எனது பக்கம் இருக்க எதற்கும் பயமில்லை கடுகளவும் பாவம் என்னை அணுகமுடியாது
Verse 6
வல்லமை மிக்கவர் செயல்கள் பல எனக்குச் செய்தாரே உயிரோடிருந்து உலகத்திற்கு எடுத்துச் சொல்லுவேன்
Verse 7
வீடு கட்டுவோர் புறக்கணித்தது மூலைக்கல்லாயிற்று கர்த்தரே செய்தார் கண்களுக்கெல்லாம் ஆச்சரியம் இது

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?