LyricFront

Karthave Ummai Thotharippen

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கர்த்தாவே உம்மைத் தோத்தரிப்பேன் நீர் ஒருவர் பராபரனாமே நான் உம்மையே நமஸ்கரிப்பேன். என் வேண்டுதல் உம்மண்டை ஏறவே; நான் இயேசுவை முன்னிட்டுக் கூப்பிட நீர் உமதாவியைத் தந்தருள.
Verse 2
நான் இயேசு நாமத்தில் மன்றாட அவரண்டைக் கடியேனை இழும்; நான் மண்ணை அல்ல விண்ணை நாட தேவாவி என்னைப் போதிவிக்கவும் நான் உமதன்பை ஆத்துமாத்திலே ருசித்தும்மைத் துதிக்க கர்த்தரே.
Verse 3
இத்தயவை என் மேலே வையும் அப்போ நான் பாடுங்கீதம் உத்தமம் அப்போது இன்பமாய் இசையும் அப்போதென் வாயின் சொற்கள் சத்தியம் அப்போதென் ஆவி தேவரீருக்கே துதியுண்டாகக் கீதம் பாடுமே.
Verse 4
அதேனெனில் சொற்கடங்காத படியே என்னில் வேண்டிக் கொள்வாரே; நான் அவரால் தள்ளாடிடாத மெய் விசுவாசமாய்த் தொழுவேனே. நற்சாட்சி அவரால் அடைகிறேன் அத்தால் நான் பிள்ளைபோல் அப்பா என்பேன்.
Verse 5
நான் அவர் ஏவுதலினாலே இவ்விதமாய் விண்ணப்பம் பண்ணவே அப்போதவர் ஒத்தாசையாலே நான் உமக்கேற்க வேண்டினதற்கே என் பரம பிதாவாம் தேவரீர் ஆம் செய்வோம் என்றுத்தாரஞ் சொல்லுவீர்.
Verse 6
நான் அவர் ஏவக்கேட்கும் யாவும் தெய்வீக சித்தத்துக் கிசைந்தது; நான் இயேசு நாமத்தில் பிதாவும் பராபரனுமான உமக்கு முன்பாய் பணிகிறதினாலே நீர் என் வேண்டுதலை அன்பாய்க் கேட்கிறீர்.
Verse 7
நான் உம்முடைய பிள்ளை என்ற நற்சாட்சி பெற்றதால் நான் பாக்கியன்; ஆகையினால் நான் வேண்டும் என்ற எல்லா நல்லீவையும் அடைபவன் நான் கேட்கிறதிலும் அதிகம் நீர் இரக்கமாய்த் தந்தருளுகிறீர்.
Verse 8
உம்மண்டை ஏசு எனக்காக மன்றாடுகையினால் நான் பாக்கியன்; மெய்யான தெய்வப் பக்தியாக நான் பண்ணிய ஜெபத்தின் நற்பலன் அத்தாலே நிச்சயமாமே எல்லாம் அவருக்குள்ளும் அவராலுமாம்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?