LyricFront

Kavarchi nayagana

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே கரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் - 2 உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம்
Verse 2
என்னை இழுத்துக் கொள்ளும் ஓடி வந்திடுவேன் அறைக்குள் அழைத்துச் செல்லும் அன்பில் களிகூறுவேன்
Verse 3
திராட்சை ரசம் பார்க்கிலும் இனிமையானவரே ஊற்றுண்ட பரிமளமே உலகெல்லாம் உம் மணமே
Verse 4
இடக்கையால் தாங்குகிறீர் வலக்கையால் தழுவுகிறீர் எனக்கு உரியவரே இதயம் ஆள்பவரே
Verse 5
உம் மீது கொண்ட நேசம் அக்கினி ஜீவாலையன்றோ தண்ணீரும் வெள்ளங்களும் தணிக்க முடியாதையா
Verse 6
சாரோன் சமவெளியில் பு த்த ரோஜாவே பள்ளத்தாக்கின் நடுவில் மலர்ந்த லீலி மலரே
Verse 7
என் நாவில் உள்ளதெல்லாம் உந்தன் புகழ் தானே நான் பேசி மகிழ்வதெல்லாம் உந்தன் பெருமை தானே
Verse 8
காட்டு மரங்களுக்குள் கிச்சிலி மரம் நீரே அன்பரே உம் நிழலில் அமர்ந்து இன்புறுவேன்
Verse 9
வாரும் என் நேசரே வயல் வெளியில் தங்கிடுவோம் நேசத்தின் உச்சிதங்களை நிறைவாய் பொழிவேன் ஐயா
Verse 10
வாயின் முத்தங்களால் முத்தங்கள் செய்திடுமே உம்மைப்போல் மாற்றிவிடும் உமக்குள் iவாத்துக் கொள்ளும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?