LyricFront

Kolkatha malai meethiley

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
கொல்கொதா மலை மீதிலே சிலுவை சுமந்தேகினார் உன்னத பிதாவின் சித்தமாய் உத்தமர் இரத்தம் சிந்தினார்
Verse 2
அந்தோ எருசலேமே ஆண்டவர் பவனி வந்தார் அந்த நாளை நீ மறந்தாய் அன்பரோ கண்ணீர் சிந்தினார்
Verse 3
மேனியில் கசையடிகள் எத்தனை வசை மொழிகள் அத்தனையும் அவர் உனக்காய் அன்புடன் சுமந்து சசித்தார்
Verse 4
உத்தம தேவ மைந்தனே சுத்தமாய் ரத்தம் சிந்தியே நித்திய வாழ்வு தனையே நீசனாம் எனக்களித்தார்
Verse 5
செந்நீரோ கண்ணீராய் மாறி தரணியில் பாய்ந்ததங்கே உன்நிலை நினைத்தவரே தன்நிலை மறந்து சகித்தார்
Verse 6
வஞ்சக உலகினிலே வணங்கா கழுத்துடனே வழிபோகும் ஆத்துமாவே வந்திடு நீ இயேசுவண்டை

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?