LyricFront

Loukeeka Inbam Menmaiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
லௌகீக இன்பம் மேன்மையும் இப்பரதேசிக்கு வேண்டாம்; பரம நன்மை செல்வமும் இங்கில்லை யாவும் மாயையாம்! பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.
Verse 2
லௌகீக வாழ்வு ஒழியும்; சரீரம் அழகற்றுப்போம்; நரர் கைவேலை அழியும்; இவ்வுலகமும் வெந்துபோம்; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.
Verse 3
ஆனாலும் இயேசு ராஜியம் அழிந்து போகமாட்டாதே; மா நீதியாம் சிங்காசனம் விழாமல் என்றும் நிற்குமே; பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.
Verse 4
நான் இங்கே தங்கும் நாள் எல்லாம் என் துன்பம் நீங்கமாட்டாதே; பரத்தில் சேர்ந்தபின் உண்டாம் மெய்வாழ்வு மேன்மை பூரிப்பே பொருளல்லாததை நாடேன்; நான் இயேசுவை சிநேகிப்பேன்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?