LyricFront

Maga Arulin Jyothiyai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மகா அருளின் ஜோதியை வீசிடும் வெள்ளி எத்தனை பிரகாசமாய் விளங்கும் தாவீதின் மைந்தன் இயேசுவே நீரே என் மணவாளனே என் பொக்கிஷம் என் பங்கும் முற்றும் சுற்றும் தயவாலும் உண்மையாலும் நீர் நிறைந்தோர் மேன்மை நாமமும் அடைந்தோர்.
Verse 2
சிநேகமுள்ள பார்வையால் அடியேனை நீர் நோக்கினால் பரம் வெளிச்சம் காட்டும் நீர் சொல்லும் இன்ப சொற்களும் தரும் சரீரம் ரத்தமும் என் ஆத்துமத்தை ஆற்றும் தேற சேர கிட்டும் என்னை நற்றிடனைத் தந்தே தேற்றும் அன்புமாய் அரவணையும்.
Verse 3
பிதாவே நீர் அநாதியில் என் பேரிலே குமாரனில் சிநேகம் வைத்த கர்த்தா; குமாரன் என்னைத் தமக்கே மனைவி என்றன்புடனே தெரிந்து கொண்ட பர்த்தா மெத்த கெட்ட பாவியான என்னைவான கர்த்தர்தாமே நோக்கினதிரக்கமாமே.
Verse 4
கிண்ணரம் யாழும் வீணையும் சங்கீத வாத்தியங்களும் களிப்பாய்த் தொனிக்கட்டும் அன்புள்ள இயேசுவுடனே நான் என்றென்றைக்கும் வாழ்வதே என் ஆவியை எழுப்பும் ஆடி பாடி கிறிஸ்துதாமே நேசராமே என்று ஓதும் சந்தம் இன்பமே எப்போதும்.
Verse 5
மகிழ்வேன் என் சிநேகிதர் அல்பா ஒமேகா என்பவர் என் நேசர் ஆதியந்தம் இனி மோட்சானந்தத்திலே நான் அவரண்டை சேர்வேனே என் பாக்கியம் அநந்தம் ஆமேன் ஆமேன் வா ரட்சிப்போ வா கெலிப்போ உனக்காக வாஞ்சிப்பேன் நான் சேர்வாயாக.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?