LyricFront

Magimai mel magimai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் மறுரூபமாவேன் மனமதிலே மகிழ்ந்திடவே தரிசிக்கவே பரன் மகமே
Verse 2
உந்தன் பாதம் என்னை பலியாய் உண்மை மனதுடன் ஒப்படைத்தேன் ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலன் விளங்கும் -தேற்றி உயிர்ப்பித்திடும் தம் ஆவியினால்
Verse 3
தேவ சாயல் தேவ சமுகம் பிள்ளைகள் அடையும் பாக்கியம் – எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன் என்னை நிரப்பிடுமே தம் ஆவியினால்
Verse 4
ஜீவ ஜலமே பொங்கி வருதே ஜீவ ஊற்றுகள் திறந்தனவே – தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும் தாகம் தீர்த்திடுவேன் தம் ஆவியினால்
Verse 5
பாதம் ஒன்றே போதும் என்றேன் பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன் இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால்
Verse 6
திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன் தூய வாழ்க்கையின் தேவை அதுவே தேவ சேவையிலே பாடு சகித்திடவே தாரும் பொறுமை பெலன் தம் ஆவியினால்
Verse 7
ஆவி ஆத்மா தேகம் முழுதும் அன்பர் இயேசுவின் சொந்தமாமே பூரணம் அருளும் ஆயத்தபடுத்தும் பாடிப் பறந்திடுவேன் தம் ஆவியினால்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?