LyricFront

Maridar Emma Nesarey Aa

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மாறிடார் எம்மா நேசரே ஆ மாறாதவர் அன்பெந்நாளுமே கல்வாரி சிலுவை மீதிலே காணுதே இம்மா அன்பிதே
Verse 2
ஆ இயேசுவின் மகா அன்பிதே அதின் ஆழம் அறியலாகுமோ இதற்கினை யேதும் வேறில்லையே
Verse 3
பாவியாக இருக்கையிலே - அன்பாய் பாரில் உன்னை தேடி வந்தாரே நீசன் என்றுனைத் தள்ளாமலே நேசனாக மாற்றிடவே:- ஆ! இயேசு
Verse 4
உள்ளத்தால் அவரை தள்ளினும் - தம் உள்ளம் போல் நேசித்ததினால் அல்லல் யாவும் அகற்றிடவே ஆதி தேவன் பலியானாரே:- ஆ! இயேசு
Verse 5
ஆவியால் அன்பைப் பகர்ந்திட - தூய தேவனின் விண்சாயல் அணிய ஆவியாலே அன்பைச் சொரிந்தார் ஆவலாய் அவரைச் சந்திக்க:- ஆ! இயேசு
Verse 6
நியாய விதி தினமதிலே - நீயும் நிலையாகும் தைரியம் பெறவே ப+ரணமாய் அன்பு பெருக புண்ணியரின் அன்பு வல்லதே:- ஆ! இயேசு
Verse 7
பயமதை நீக்கிடுமே - யாவும் பாரினிலே சகித்திடுமே அது விசுவாசம் நாடிடுமே அன்பு ஓருக்காலும் ஓழியாதே:- ஆ! இயேசு

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?