LyricFront

Megamithil Yesu Rajan Vegam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
மேகமீதில் யேசு ராஜன் வேகம் வாராரே ஆயத்தமுள்ளோரை ஆகாயம் சேர்க்க அவரே வாராரே
Verse 2
ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே அவனியில் வாராரே மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார்
Verse 3
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தோரெல்லாம் கிளம்பியே எழும்பிடுவார் மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம் மறைந்தே போவாரே
Verse 4
பாடுபட்டோர்க்குப் பலனளிப்பாரே பாடுபட்டவர் தாமே கூடும் நமக்கோ குறைவில்லா பலனையே கூவியே கொடுத்திடுவார்
Verse 5
அவருரைத்த அடையாளங்ளெல்லாம் தவறாமல் நடக்கின்றதே அவர் வரும் வேளையை எவருமே அறிவார் ஆண்டவரே அறிவார்
Verse 6
ஆயிரமாயிரம் அவரது வசனங்கள் அதை அறிவிக்கின்றதே அப்போஸ்தலர் தீர்க்கத்தரிசிகளெல்லாம் அதையே அறிவிக்கின்றார்
Verse 7
ஆயிர வருடம் ஆளுகை செய்வார் ஆண்டவர் இயேசு தாமே நீதி சமாதானம் நிறைந்N;த இருக்கும் ஜோதியின் ஆளுகையில்
Verse 8
அல்லேலூயா கீதமே பாடி அகமகிழ்ந்தாடிடுவோம் வல்லவர் வரும் வேளையுமிதோ மெல்லவே நெருங்கிற்றே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?