Verse 1மீட்பரே உம்மை பின் செல்ல
சிலுவையை எடுத்தேன்
ஏழை நான் பெரியோனல்ல
நீரே எல்லாம் நான் வந்தேன்
Verse 2உம்மை பின் செல்வேன் என் சுவாமி
எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும்
உமதன்பால் நான் நிற்பேன்
Verse 3பெற்றார் உற்றார் ஆஸ்தி கல்வி
மேன்மை லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி
வெறுத்தேனே முற்றிலும்
Verse 4மெய்தான் லோகத்தார் பகைப்பார்
உம்மை முன் பகைத்தாரே
லோக ஞானிகள் நகைப்பார்
பயமேன் நீர் விடிரே
Verse 5சர்வ வல்ல தேவன் அன்பாய்
திடன் செய்வார் முன் செல்வேன்
தேவ துரோகிகள் மா வம்பாய்
சீறினாலும் நான் செல்வேன்;;;;