LyricFront

Nal Meetbare Ummile

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நல் மீட்பரே உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல்மீட்பரே உம்மேலே என் குற்றம் வைக்க நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர்.
Verse 2
நல் மீட்பரே உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே எப்பாடும் நீக்குமேன்; நல் மீட்பரே உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர்.
Verse 3
நல் மீட்பரே உம்பேரில் என் ஆத்துமா சார நீர் சேர்த்து உம்திவ்விய மார்பில் சோர்பெல்லாம் நீக்குவீர்; நேசா! இம்மானுவேலே! இயேசென்னும் நாமமும் உகந்த தைலம் போலே சுகந்தம் வீசிடும்.
Verse 4
நல்மீட்பரே பாங்காக அன்போடு சாந்தமும் நீர்தந்தும் சாயலாக சீராக்கி மாற்றிடும்; நல்மீட்பரே உம்மோடு பின் விண்ணில் வாழுவேன்; நீடூழி தூதர் பாட பாடின்றிப் பூரிப்பேன்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?