LyricFront

Namathu Yesu Christhuvin Namam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நமது இயேசு கிறிஸ்துவின் நாமம் நானிலமெங்கும் ஓங்கிடவே புனிதமான பரிசுத்த வாழ்வை மனிதராம் எமக்களித்தார்
Verse 2
தேவகிருபை எங்கும் பெருக தேவனை ஸ்தோத்தரிப்போம் பாவ இருள் அகல தேவ ஒளி அடைந்தோம்
Verse 3
அவரை நோக்கிக் கூப்பிடும் வேளை அறிவிப்பாரே அற்புதங்கள் எனக்கெட்டாத அறிந்திடலாகா எத்தனையோ பதிலளித்தார்
Verse 4
பதறிப்போன பாவிகளாக சிதறி எங்குமே அலைந்தோம் அவரை நாம் தெரிந்தறியோமே அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார்
Verse 5
பலத்த ஜாதி ஆயிரமாக படர்ந்து ஓங்கி நாம் வளர எளிமையும் சிறுமையுமான எமக்கவர் அருள்புரிவார்
Verse 6
நமது கால்கள் மான்களைப் போல நடந்து ஓடிப் பாய்ந்திடவே உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே உன்னதமான ஊழியத்தில்
Verse 7
பரமனேசு வந்திடும்போது பறந்து நாமும் சென்றிடுவோம் பரமனோடு நீ^ழி வாழும் பரம பாக்கியம் பெறுவோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?