LyricFront

Namba Vendam Namba Vendam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் பொய்யுலகை நம்ப வேண்டாம்; நேசங் காட்டித் துரோகஞ் செய்யும் பாழுலகை நம்ப வேண்டாம்
Verse 2
உன்னை பெற்ற மாதாவெங்கே? போஷித்த உன் தந்தையெங்கே? போய்விட்டாரோ போய்விட்டாரோ உன்னை விட்டுப் போய்விட்டாரோ?
Verse 3
திருடனைப் போல சாவு வரும் திடுக்கிடுவாய் நீயும் அப்போ; பாம்பின் வாயில் தவளை போலே பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!
Verse 4
பிரேதமாகப் பாவி யுன்னை தூக்கிப் போடுவார் கல்லறைக்கு; அங்கே உன்னை வைத்திடுவார் நம்புவாயோ உலகைப் பின்னும்?
Verse 5
இயேசு நாதர் பாதந்தேடும்; மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும் குருசில் தொங்கும் நேசர் பாரும் குணமாக்குவார் இப்போ வாரும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?