LyricFront

Nantri bali beedam kadduvom

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நன்றிப்பலிபீடம் கட்டுவோம் நல்ல தெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மை ஆயிரங்கள் சொல்லிச் சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
Verse 2
ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று வாழ பிரித்தெடுத்து உமது ஊழியம் செய்ய வைத்தீர்
Verse 3
சிறந்த முறையிலே குரல் எழுப்பும் சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர்
Verse 4
இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் இயேசு அரசுக்குள் சேர்;த்துவிட்டீர் உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர்
Verse 5
புதிய உடன்பாட்டின் அடையாளமாய் புனித இரத்தம் ஊற்றினீரே சத்திய ஜீவ வார்த்தையாலே மரித்த வாழ்வையே மாற்றினீரே
Verse 6
எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் தூரம் வாழ்ந்து வந்த எங்களையே அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால்
Verse 7
குற்றம் செய்ததால் மரித்திருந்தோம் இயேசுவோடே கூட எழச்செய்தீர் கிருபையினாலே இரட்சித்தீரே உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
Verse 8
பார்க்கும் கண்களை தந்தீரய்யா பாடும் உதடுகள் தந்தீரய்யா உழைக்கும் கரங்களை தந்தீரய்யா ஓடும் கால்களைத் தந்தீரய்யா
Verse 9
இதய பெலவீனம் நீக்கினீரே சுகர் வியாதிகள் போக்கினீரே அல்சர் இல்லாமல் காத்தீரே ஆஸ்மா முற்றிலும் நீங்;கியதே
Verse 10
நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா அணைக்கும் கணவனை தந்தீரய்யா அன்பு மனைவியை தந்தீரய்யா
Verse 11
இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் வாழத் தேவையான வசதி தந்தீர் கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் கடனே இல்லாமல் வாழ வைத்தீர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?