LyricFront

Neer Thantha Nanmai Yaavaiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து கர்த்தரே மகிழ்ச்சியோடு என்றைக்கும் நான் துதி செய்யவே.
Verse 2
குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த நன்மைகள் ஏராளமானதே.
Verse 3
என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தேவரீர் இக்கட்டுண்டான காலத்தும் விழாமல் தங்கினீர்.
Verse 4
அநேகமான தீமைகள் அண்டாமல் தடுத்தீர் கைம்மாறில்லாத நன்மைகள் கர்த்தாவே பொழிந்தீர்.
Verse 5
இம்மையில் என்றும் தாழ்மையாய் தெய்வன்பை நினைப்பேன்; மறுமையில் வணக்கமாய் உம்மையே போற்றுவேன்.
Verse 6
புகழ்ச்சி துதி தோத்திரம் ஒன்றான உமக்கே இகத்திலும் பரத்திலும் எழும்பத் தகுமே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?