LyricFront

Nenjame Veenaai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நெஞ்சமே வீணாய் சோர்ந்துபோகாதே தஞ்சம் இயேசு இருக்கையில் தளர்ந்து விடாதே வஞ்சகன் வீசும் வலையில் விழாதே பஞ்சகாயன் உன்னை பாதுகாப்பாரே
Verse 2
சோதனைபலவும் சூழ்ந்திடும் நேரம் வேதனை விதம் விதம் வந்திடுங் காலம் தீதனைத்தும் திருச்சிலுவையில் தொங்கும் நாதனை நினைத்திடில் நாசமாய் போகும்
Verse 3
பெற்றவரும் பெண்டு பிள்ளைகளும் மிக உற்றவரும் உயிர்தோழர்களானோரும் பற்றற்றவராய்ப் பழகிடும்போதும் மற்றவர் செய்கையால் மனங் கலங்காதே
Verse 4
கஷ்டங்கள் வருங்கால் களிப்பாக எண்ணு இஷ்டமுடன் ஜெபம் எந்நேரம்பண்ணு நஷ்டங்கள் வந்தாலும் நலமென்று சொல்லு துஷ்டனின் சூட்சியை தூயனால் வெல்லு
Verse 5
நியாயமில்லாமல் குற்றம் காண்போர்கள் நியாயத் தீர்ப்பின் நாள் வெட்கங் கொள்வார்கள் தூயவன் முன் உன் சிறு இருதயம் மாயமும் மாசுமில்லானதால் போதும்
Verse 6
செய்ததும் சொன்னதும் இல்லென்று மறுப்பார் செய்யாததும் சொல்லாததும் ஆம் என்று உரைப்பார் பொய்யிலும் புரட்டிலும் புதைந்தது உலகம் மெய்யுடை யான் இயேசு மீது வை பாரம்
Verse 7
இயேசுவின் சிந்தை இருந்திட வேண்டும் இயேசுவின் ஆவியில் இயங்கிட வேண்டும் இயேசுவைப் போல் எல்லாம் சகித்திட வேண்டும் இயேசுவின் கிருபையைப்பெற்றிட வேண்டும்!

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?