LyricFront

Nerthiyanathanaithum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
நேர்த்தியானதனைத்தும் சின்னம் பெரிதெல்லாம் ஞானம் விந்தை ஆனதும் கர்த்தாவின் படைப்பாம்.
Verse 2
பற்பல வர்ணத்தோடு மலரும் புஷ்பமும் இனிமையாகப் பாடி பறக்கும் பட்சியும்.
Verse 3
மேலோர் கீழானோரையும் தத்தம் ஸ்திதியிலே அரணில் குடிசையில் வசிக்கச் செய்தாரே
Verse 4
இலங்கும் அருவியும் மா நீல மலையும் பொன் நிற உதயமும் குளிர்ந்த மாலையும்
Verse 5
வசந்த காலத் தென்றல் பூங்கனித் தோட்டமும் காலத்துக்கேற்ற மழை வெய்யோனின் காந்தியும்.
Verse 6
மரமடர்ந்த சோலை பசும் புல் தரையும் தண்ணீர்மேல் தாமரைப்பூ மற்றெந்த வஸ்துவும்.
Verse 7
ஆம் சர்வவல்ல கர்த்தா எல்லாம் நன்றாய்ச் செய்தார் இதை நாம் பார்த்துப் போற்ற நாவையும் சிஷ்டித்தார்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?