LyricFront

Paavi naan enna seiven

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பாவி நான் என்ன செய்வேன் கோவே ஜீவன் நீர் விட்டதற்காய் ?
Verse 2
தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில் தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ
Verse 3
நாடி எனைத் தயவாய் மணஞ்செய்ய தேடிவந்தீர் அரசே ஆடுகளுக்காக நீடி உயிர் தர பாடு பட்டுக் குரு சூடிறந்தீர் அன்றோ
Verse 4
பொன்னுல காதிபனே தேவீர் என்ன செய்தீர் ஐயனே சின்னப் படுத்தவும் கன்னத்தடிக்கவும் சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்
Verse 5
வாரால் அடிக்கப்பட்டு குட்டுண்டு வாதைபட்டெண்ணம் அற்றீர் சீரா மனுடவதாரா சருவாதி காரா பரம குமாரா ஓலோலமே
Verse 6
வாதை உமக்கெதினால் உண்டாயிற்று பாதகிபாவத்தினால் வேதம் நிறைவுற ஆதி பவம் அற நீதி தரும் யேசு நாத சுவாமியே
Verse 7
குற்றமற்ற மீட்பர் பவக்கடன் முற்றும் அறத்தீர்ப்பார் கொற்ற வர்க்கும் கல்வி கற்றவர்க்கும் சுரர் மற்ற வர்க்கும் அளவற்ற கிருபையே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?