LyricFront

Paramandalithilulla Magimai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம் இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம் பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல்.
Verse 2
வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன் நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன் மண் அழியும் இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ
Verse 3
எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு? இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம்
Verse 4
லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும் இயேசுவோடு சஞ்சரிக்கும் ஒரு நாளே இங்கேயும் மேன்மையே; அங்கவரை சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
Verse 5
எனக்கு மோட்சானந்தத்தில் பங்குண்டாக இயேசுவே நீர்தான் இவ்வனாந்தரத்தில் எனக்குத் துணையாமே ஆ நான் இன்றும் என்றைக்கும் உம்முடன் இருக்கவும்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?