LyricFront

Pasumayana pul veliyil

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே (2)
Verse 2
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்பா - (2) நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே பசுமையான புல் வெளியில்
Verse 3
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர் உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் - (2) என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 4
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல - (2) என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 5
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே - (2) என் மேய்ப்பரே நல் ஆயனே
Verse 6
கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர் மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் - (2) என் மேய்ப்பரே நல் ஆயனே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?