Verse 1பாவ நாசர் பட்ட காயம்
பார்த்துணர்ந்து கொள்வது
சுத்தம் செல்வம் நற்சகாயம்
சமாதானம் உள்ளது
Verse 2ரத்த வெள்ளம் பாய்ந்ததாலே
அன்பின் வெள்ளம் ஆயிற்று
தேவ நேசம் அதினாலே
மானிடர்க்குத் தோன்றிற்று
Verse 3ஆணி பாய்ந்த மீட்பர் பாதம்
தஞ்சம் என்று பற்றினேன்
அவர் திவ்ய நேச முகம்
அருள் வீசக் காண்கிறேன்
Verse 4பாசத்தால் என் நெஞ்சம் பொங்கித்
துக்கத்தால் கலங்குவேன்
அவர் சாவால் துக்கம் மாறிச்
சாகா ஜீவன் அடைவேன்
Verse 5நாதா நானும் மோட்சம் வந்து
உம்மைக் காணுமளவும்
நன்றியுள்ள நெஞ்சத்தோடு
உம்மைப் பற்ற அருளும்