Verse 1பெந்தகொஸ்தின் ஆவியே
உம்மால் போதிக்கப்பட்டே
கேட்போம் உன்னத ஈவே
தூய மெய்யன்பே.
Verse 2அன்பு யாவும் சகிக்கும்
தீதெண்ணாது சாந்தமும்
அதுவெல்லும் சாவையும்
அன்பை ஈயுமேன்.
Verse 3போதனையும் ஓய்ந்திடும்
பூரண அறிவிலும்
அன்பே என்றும் நிலைக்கும்
அன்பே ஈயுமேன்
Verse 4காட்சியால் விஸ்வாசமும்
பூரிப்பால் நம்பிக்கையும்
ஓயும்! என்றும் ஒளிரும்
ஆன்பே ஈயுமேன்.
Verse 5அன்பு விசுவாசமும்
நம்பிக்கை இம்மூன்றிலுமு;
ஒப்பற்ற மேலானதும்
அன்பே ஈயுமேன்
Verse 6தூய நேச ஆவியே
உம்மைப்போற்றும் தாசர்க்கே
எங்கள் பேரில் அமர்ந்தே
அன்பே ஈயுமேன்.