LyricFront

Pirathaana Thuuthan Ekkaalam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார்
Verse 2
சாயங்காலத்திலோ நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார்
Verse 3
இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர்
Verse 4
நோவா காலத்தின் சம்பவம்போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண்கொண்டும் பலர் அசந்து வெறித்திருப்பார்
Verse 5
லௌகிகக் கவலைகளினாலும் இலட்சை மிகுந்த வெறியினாலும் எம் இதயம் பாரமடையாமல் எச்சரிக்கையுடன் காத்திருப்போம்
Verse 6
இரவும் பகலும் விழிப்பாய் இருதயம் நொருங்கி ஜெபிப்போம் கற்புள்ள கன்னிகையாக நாமும் கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்
Verse 7
தவிக்கும் உலகம் அந்த நாளில் தலைகளை உயர்த்தி நடப்போம் வருகை நெருங்க கர்த்தர் இயேசு வாசற்படியில் வந்து நிற்கிறார்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?