LyricFront

Ratham Kaayam Kuthum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
இரத்தம் காயம் குத்தும் நிறைந்து நிந்தைக்கே முள் கிரீடத்தாலே சுற்றும் சூடுண்ட சிரசே முன் கன மேன்மை கொண்ட நீ லச்சை காண்பானேன்? ஐயோ வதைந்து நொந்த உன் முன் பணிகிறேன்.
Verse 2
நீர் பட்ட வாதை யாவும் என் பாவப் பாரமே; இத்தீங்கும் நோவும் சாவும் என் குற்றம் கர்த்தரே இதோ நான் என்றுஞ் சாக நேரஸ்தன் என்கிறேன்; ஆனாலும் நீர் அன்பாக என்னைக் கண்ணோக்குமேன்.
Verse 3
நீர் என்னை உமதாடாய் அறியும் மேய்ப்பரே; முன் ஜீவன் ஊறும் ஆறாய் என் தாகம் தீர்த்தீரே; நீர் என்னைப் போதிப்பிக்க அமிர்தம் உண்டேனே; நீர் தேற்றரவளிக்க பேரின்பமாயிற்றே.
Verse 4
உம்மண்டை இங்கே நிற்பேன் என்மேல் இரங்குமேன்; விண்ணப்பத்தில் தரிப்பேன் என் கர்த்தரை விடேன்; இதோ நான் உம்மைப் பற்றி கண்ணீர் விட்டண்டினேன்; மரிக்கும் உம்மைக் கட்டி அணைத்துக் கொள்ளுவேன்.
Verse 5
என் ஏழை மனதுக்கு நீர் பாடுபட்டதே மகா சந்தோஷத்துக்கு பலிக்கும் மீட்பரே என் ஜீவனே நான் கூடி இச்சிலுவையிலே உம்மோடென் கண்ணை மூடி மரித்தால் நன்மையே.
Verse 6
நான் உம்மைத் தாழ்மையாக வணங்கி நித்தமே நீர் பட்ட கஸ்திக்காக துதிப்பேன் இயேசுவே நான் உம்மில் ஊன்றி நிற்க சகாயராயிரும்; நான் உம்மிலே மரிக்க கடாட்சித்தருளும்.
Verse 7
என் மூச்சொடுங்கும் அந்த கடை இக்கட்டிலும் நீர் எனக்காய் இறந்த ரூபாகக் காண்பியும்; அப்போ நான் உம்மைப் பார்த்து கண்ணோக்கி நெஞ்சிலே அணைத்துக்கொண்டு சாய்ந்து தூங்குவேன் இயேசுவே.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?