LyricFront

Saruva Logathiba

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம்
Verse 2
திரு அவதாரா, நமஸ்காரம் ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம் தரணியில் மனுடர் உயிர் அடைந்தோங்கத் தருவினில் மாண்டோர் நமஸ்காரம்
Verse 3
பரிசுத்த ஆவி, நமஸ்காரம் பரம சற்குருவே, நமஸ்காரம் அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் அரியசித்தே சதா நமஸ்காரம்
Verse 4
முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?