LyricFront

Siluvaiyin Nilalil Anuthinam Adiyan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப்பாறிடுவேன் ஆ… ஆ…. சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில்
Verse 2
பாவ பாரச் சுமையதால் சோர்ந்தே தளர்ந்ததென் ஜீவியமே ஆ…ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகில்; ஏகுவேன் பறந்தே வேகம்
Verse 3
எவ்வித கொடிய இடறுக்கும் அஞ்சேன் ஏசுவை சார்ந்து நிற்பேன் - ஆ…ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக் கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்
Verse 4
இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ…ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலு மினிய வேதம் தருமெனக்கானந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?