Verse 1சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
Verse 2புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
Verse 3எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேஷகம் செய்கின்றார்
Verse 4ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்கைத் தொடரும்
Verse 5என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்