LyricFront

Singara Maligayil Jeyageethangal

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
சிங்கார மாளிகையில் ஜெயகீதங்கள் பாடிடுவோம் சீயோன் மணவாளனுடன்
Verse 2
ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து ஆறுதலடைந்திடுவோம் - அங்கே அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி அன்பரில் மகிழ்ந்திடுவோம்
Verse 3
துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார் துதியின் ஆடையுடனே அங்கே உயரமாம் சீயோன் உன்னதரோடு களித்து கவி பாடுவோம்
Verse 4
முள் முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின் திருமுகம் கண்டிடுவோம் - அங்கே முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி தரித்தோராய் துதித்திடுவார்
Verse 5
ப+மியின் அரசை புதுபாட்டாய் பாடி புன்னகை ப+த்திடுவோம் புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய் மண்ணாசை ஓழித்திடுவோம்
Verse 6
அவருரைத்த அடையாளங்களெல்லாம் தவறாமல் நடக்கின்றதே - அவர் வரும் வேளை அறியாதிருப்பதால் எப்போதும் ஆயத்தமாயிருப்போம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?