LyricFront

Thanthai Than Siru Balanai

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தந்தை தன் சிறு பாலனை கையேந்தி தாங்குவான்; சீராட்டப் பெற்ற பாலகன் அபாயம் நினையான்.
Verse 2
அவ்வாறே என்னை தந்தையே காப்பாற்றித் தாங்குவீர்; என் பலவீனம் நீங்கவும் கையேந்தி வருவீர்.
Verse 3
மாதாவின் நேச மடியில் சாய்ந்தாடும் குழந்தை தாயாரின் முகம் பார்க்கையில் மறக்கும் கிலேசத்தை.
Verse 4
அவ்வாறே நேச ரசஷகா உம் அருள் முகத்தை நான் பார்க்க ஸ்திரமாக்குவீர் என் விசுவாசத்தை.
Verse 5
தாய் தந்தைப் பக்கம் பாலரை உட்கார வைக்குங்கால் சந்தோஷித்துள்ளம் களிப்பார் பெற்றோரின் அன்பினால்.
Verse 6
அவ்வாறே திருப்பாதத்தில் ஆனந்தம் அடைந்தேன்; மென்மேலும் அருள் நாதரே பேரன்பை ருசிப்பேன்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?