LyricFront

Thanthen Yennai Yesuve

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும்
Verse 2
ஜீவ காலம் முழுதும் தேவ பணி செய்திடுவேன் ஊரில் கடும் போர் புரிகையில் காவும் உந்தன் கரந்தனில் வைத்து – தந்தேன்
Verse 3
உந்தன் சித்தம் நான் செய்வேன் எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் எந்த இடம் எனக்கு கட்டினும் ஏசுவே அங்கே இதோ போகிறேன் – தந்தேன்
Verse 4
ஒன்றுமில்லை நான் ஐயா உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன் அன்று சீடருக்கு அளித்த ஆவியால் இன்றே அடியேனை நிரப்பும் – தந்தேன்
Verse 5
உலகோர் என்னை நெருக்கிப் பலமாய் யுத்தம் செய்திடினும் நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு நானிலத்தினில் நாதா வெல்லுவேன் – தந்தேன்
Verse 6
கஷ்டம், நஷ்டம் வந்தாலும் துஷ்டர் கூடி சூழ்ந்திட்டாலும் அஷ்டதிக்கும் ஆளும் தேவனே அடியேன் உம்மில் அமரச் செய்திடும் – தந்தேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?