LyricFront

Thooya Thooya Thooyaa

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா ! தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே ; தூய தூய தூயா! மூவரான ஏகா! காருணியரே தூய திரியேகரே !
Verse 2
தூய தூய தூயா! அன்பர் சூழ நின்று தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே கேருபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப் பெற்று இன்றென்றும் வீற்றாள்வீர் அநாதியே !
Verse 3
தூய தூய தூயா ! ஜோதி பிரகாசா பாவக் கண்ணால் உந்தன் மாண்பைக் காண யார் வல்லோர் ? நீரே தூய தூயர் மனோவாக்குக் கெட்டா மாட்சிமை தூய்மை அன்பும் நிறைந்தோர் .
Verse 4
தூய தூய தூயா! சர்வ வல்ல நாதா ! வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்தரிக்குமே; தூய தூய தூயா! மூவரான ஏகா! காருணியரே தூய திரியேகரே!

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?