Verse 1துதி கீதமே பாடியே
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்
Verse 2தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்தத் தேவனைத் துதித்திடுவோம்
Verse 3காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய்த் துதித்திடுவோம்
Verse 4பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்
Verse 5கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்
Verse 6வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்ந்திடுவோம்