LyricFront

Thuthi Sei Manamey Nitham

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதிசெய் மனமே நிதம் துதிசெய் துதிசெய் இம்மட்டும் நடத்தின உன் தேவனை இன்றும் என்றும் நன்றி மிகுந்த மனதோடே
Verse 2
முன் கால மெல்லாம் உன்னைத் தம் கரமதில் ஏந்தி வேண்டிய நன்மைகள் யாவும் உனக்களித்தாரே
Verse 3
ஏங்கிடும் வழியில் பாடுகள் பல நேர்ந்தபோது ஏகபரன் உன்காவலனாய் இருந்தாரே
Verse 4
சோதனை பலவாய் மேகம்போல் உன்னை சூழ்ந்தாலும் சேதமுறாமல் முற்றிலும் காக்க வல்லோரை
Verse 5
தாய் தந்தை தானும் ஏகமாய் உனை மறந்தாலும் தூயரின் கையில் உன் சாயல் உள்ளதை நினைத்தே
Verse 6
சந்ததம் உன்னை நடத்திடும் சத்திய தேவன் சொந்தம் பாராட்டி உன்னுடன் இருப்பதினாலே

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?