LyricFront

Thuthiyey Thuthiyey Thuthiyey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
துதியே துதியே துதியே துதியே துதியுமக்கே துதியே (2)
Verse 2
தூத கணங்கள் தூயவர் உம்மை பாத சேவைசெய்து பணிந்தும்மைத் துதிக்கும் வேத முதல்வனும் நீர் - துதி
Verse 3
அண்டசராசரம் அனைத்துமே ஒன்றாய் விண்டலாதிபா வியந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி
Verse 4
பரிசுத்தர் யாவரும் பரமனே உம்மைத் தரிசிக்க நாடி தாழ்ந்தும்மைத் துதிக்கும் பரிசுத்த தேவனும் நீர் - துதி
Verse 5
அந்தகாரத்தின் அடிமைகளுக்கு சுந்தர ஒளியை சுடரிடச் செய்ய வந்த குமாரனும் நீர் - துதி
Verse 6
மீட்கப்பட்டவர்கள் ஆனந்தங் கொண்டு பாட்டுகள் பாடி மகிழ்ந்தும்மைத் துதிக்கும் ஆட் கொண்ட நாதனும் நீர் - துதி
Verse 7
கர்த்தாதி கர்த்தனே இராஜாதி ராஜனே நித்தியமான எம் தேவாதி தேவே துத்தியம் செய்திடுவோம் - துதி

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?