LyricFront

Thuyarutra Venthe

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஒன்பதாம்மணி நேரத்திலே இயேசு: ‘எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி’ என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: ‘என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று அர்த்தமாம். மாற்கு 15:34 துயருற்ற வேந்தரே சிலுவை ஆசனரே நோவால் வாடும் முகத்தை இருள் திரை மூடிற்றே; எண்ணிறைந்த துன்பம் நீர் மௌனமாகச் சகித்தீர்.
Verse 2
பலியாக மரிக்கும் வேளை வரும் அளவும் மூன்று மணி நேரமாய் துணையின்றி மௌனமாய் காரிருளில் தேவரீர் பேயோடே போராடினீர்.
Verse 3
தெய்வ ஏக மைந்தனார் அபிஷேக நாதனார் ‘தேவனே என் தேவனே எந்தனை ஏன் கைவிட்டீர்?’ என்றுரைக்கும் வாசகம் கேள் இருண்ட ரகசியம்.
Verse 4
துயர் திகில் இருண்டே சூழும்போது தாசரை கைவிடாதபடி நீர் கைவிடப்பட்டிருந்தீர்; இக்கட்டில் சமீபம் நீர் என்றிதாலே கற்பிப்பீர். ஆமென்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?