Verse 1உலகோர் உன்னைப் பகைத்தாலும்
உண்மையாய் அன்பு கூறுவாயா?
உற்றார் உன்னை வெறுத்தாலும்
உந்தன் சிலுவை சுமப்பாயா? (2)
Verse 2உனக்காக நான் மரித்தேனே
எனக்காக நீ என்ன செய்தாய்? (2)
Verse 3உலக மேன்மை அற்பம் என்றும்
உலக ஆஸ்தி குப்பை என்றும்
உள்ளத்தினின்று கூறுவாயா?
ஊழியம் செய்ய வருவாயா? (2)
Verse 4மேய்ப்பன் இல்லாத ஆடுகள் போல்
மேய்கிறார் பாவப் புல்வெளியில்
மேய்ப்பன் இயேசுவை அறிந்த நீயும்
மேன்மையை நாடி ஓடுகின்றாயோ? (2)
Verse 5இயேசு என்றால் என்ன விலை
என்றே கேட்டிடும் எத்தனை பேர்
பிள்ளைகள் அப்பம் கேட்கின்றனர்
ஜீவ அப்பம் கொடுப்பாயா? (2)
Verse 6ஐந்து சகோதரர் அழிகின்றாரே
யாரையாவது அனுப்பிடுமே
யாரை நான் அனுப்பிடுவேன்
யார் தான் போவார் எனக்காக? (2)