உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேக ஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
Verse 2
உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்றதையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
Verse 3
உமது அன்பை அதிகாலையில்
காணச் செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் வரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்ட வேண்டும் திவ்ய நாதரே
அன்பின் சிகரமே ஆரயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே