LyricFront

Ungal Thookam

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உங்கள் துக்கம் சந்தோஷஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே என் இயேசு கைவிட மாட்டார்
Verse 2
கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்துவிடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய்... கலங்கிடவே வேண்டாம்
Verse 3
நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் உடைந்த உள்ளம் தாங்குகிறார் காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் கண்ணீர் துடைகின்றார் - (உன்)
Verse 4
திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விட மாட்டார் தாங்கிடும் பெலன் தருவார் தப்பி செல்ல வழி செய்வார் - (நீ)
Verse 5
நல்லதோர் போராட்டம் போராடுவோம் விசுவாசம் காத்துக் கொள்வோம் நீதியின் கிரீடம் நமக்கு உண்டு நேசர் வருகையில் தந்திடுவார் - நம்
Verse 6
மாலையில் மகனே அழுகின்றாயா காலையில் அக மகிழ்வாய் நித்திய பேரானந்தம் நேசரின் சமூகத்திலே
Verse 7
அக்கினியின் மேல் நடந்தாலும் எரிந்து போக மாட்டாய் ஆறுகளை நீ கடந்தாலும் மூழ்கி போக மாட்டாய்
Verse 8
முழுமையாய் மனம் திரும்பிவிடு முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று எங்கள் துக்கம் சந்தோஷஷமாய் மாறும்
Verse 9
எங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்துவிடும் கலங்கிடவே மாட்டோம் நாங்கள் கலங்கிடவே மாட்டோம்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?