LyricFront

Unnathamanavarin Uyar Maraivilirukiravan

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்;;; இது பரம சிலாக்கியமே
Verse 2
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்
Verse 3
தேவன் உன் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர் அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் என் நம்பிக்கையும் அவரே - அவர்
Verse 4
ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும் அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே உன் தேவன் உன் தாபரமே - அவர்
Verse 5
தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ ஒரு வாதையும் உன் கூடாரத்தையே அணுகாமலே காத்திடுவார் - அவர்
Verse 6
உன் வழிகளிளெல்லாம் உன்னைத் தூதர்கள் காத்திடுவார் உன் பாதம் கல்லில் இடறாதபடி தம் கரங்களில் ஏந்திடுவார் - அவர்
Verse 7
ஆபத்திலும் அவரை நான் நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்;;;; என்னைத் தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே என் ஆத்தும நேசரவர் - அவர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?